×

வீட்டு பாடம் எழுதாததால் சக மாணவர்களால் அறைய செய்து 2ம் வகுப்பு சிறுவனுக்கு தண்டனை: உபி பள்ளி ஆசிரியைக்கு கடும் கண்டனம்

முசாபர்நகர்: வீட்டு பாடத்தை எழுதாததால் சக மாணவர்களை வரிசையாக அறைய வைத்து 2ம் வகுப்பு மாணவருக்கு ஆசிரியை தந்த கொடூர தண்டனைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதத்தால், சாதியால் பிரித்தாளும் அரசியல், சமூகத்தில் எத்தகைய கொடூரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு சாட்சியாக, உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரின் குப்பாபூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ நேற்று முன்தினம் வெளியாகி பெரும் வைரலானது. இந்த வீடியோவில் ஆசிரியை திரிப்தா தியாகி என்பவர் வகுப்பில் தனது இருக்கையில் அமர்ந்திருக்க, 2ம் வகுப்பு மாணவன் ஒருவன் அழுதபடி நிற்கிறான்.

வீட்டு பாடம் எழுததால் அந்த மாணவனை ஆசிரியை திட்டியபடி சக மாணவர்களை வைத்து கன்னத்தில் அறைய செய்து கொடூரமான தண்டனையை தருகிறார். அதோடு, மாணவனின் மதத்தை பற்றி வெறுப்பு கருத்துக்களை ஆசிரியை கூற, ஆண் குரல் ஒன்று அதை அமோதிக்கிறது. அதோடு, குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த மாணவர்களை வைத்து, அந்த மாணவனை ஆசிரியை அறைய வைக்கிறார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து ஆசிரியைக்கு எதிராக கண்டனங்கள் குவிந்தன. சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்கள், சம்மந்தப்பட்ட ஆசிரியைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் கூறுகையில், ‘‘அந்த ஆசிரியை இதுபோன்ற தண்டனையை தருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டதால் நாங்கள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை. அதே சமயம், அந்த பள்ளியில் இனியும் எங்கள் மகனை படிக்க வைக்க மாட்டோம்’’ என்றனர். ஆசிரியை ஊனமுற்றவர் என்பதால், மாணவர்களை வைத்து அடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முசாபர்நகர் போலீசார் ஆசிரியை மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post வீட்டு பாடம் எழுதாததால் சக மாணவர்களால் அறைய செய்து 2ம் வகுப்பு சிறுவனுக்கு தண்டனை: உபி பள்ளி ஆசிரியைக்கு கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Muzaffarnagar ,Dinakaran ,
× RELATED ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு இன்றி...