![]()
பெய்ஜிங்: தைவானை தனக்கு சொந்தம் என்று சீனா உரிமை கொண்டாடி வருகின்றது. இதன் காரணமாக அவ்வப்போது தைவானுக்கு சீனா அச்சுறுத்தல் விடுப்பது வழக்கமாகும். இந்நிலையில் தைவானுக்கு சுமார் 4000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா இரண்டு நாட்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது. இதனால் சீனா ஆத்திரமடைந்துள்ளது. இதனை தொடர்ந்து தைவானை நோக்கி போர் விமானங்களையும், கப்பல்களையும் சீனா அனுப்பி வைத்துள்ளது.
இது குறித்து தைவான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சீனாவின் 32 விமானங்களும், கடற்படையின் ஒன்பது கப்பல்களும் தைவானை அச்சுறுத்தும் வகையில் சீனா அனுப்பியுள்ளது. இவற்றில் 20 விமானங்கள் தைவான் ஜலசந்தியின் எல்லையை கடந்தன அல்லது வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தை மீறியுள்ளன. இதற்கு தைவானின் போர் விமானங்கள், கப்பல்கள் மற்றும் ஏவுகணை தக்க பதிலடி கொடுத்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post தைவானுக்கு போர் விமானங்கள், கப்பல்களை அனுப்பி சீனா அச்சுறுத்தல் appeared first on Dinakaran.
