×

முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி ஒன்றிய தலைமைசெயலகத்தை போராடி வென்றது கர்நாடகா

சென்னை: முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடரில் ஹாக்கி கர்நாடகா 2-1 என்ற கோல் கணக்கில் ஒன்றிய தலைமைச் செயலக அணியை போராடி வென்றது. எழும்பூர் ஹாக்கி அரங்கில் நடைபெற்று வரும் இந்த தொடரின் 3வது நாளான நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ஏ பிரிவில் உள்ள ஹாக்கி கர்நாடகா – ஒன்றிய தலைமைச் செயலகம் அணிகள் மோதின. தொடக்கத்தில் இருந்தே ஒருங்கிணைந்து விளையாடி தாக்குதல் நடத்திய சென்ட்ரல் செக்ரடேரியட் அணிக்கு, 3வது நிமிடத்திலேயே கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் முகமது ஷரீக் அபாரமாக கோல் அடித்தார்.

இதைத் தொடர்ந்து, 21வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் கர்நாடகா அணியின் பதிலி ஆட்டக்கார் திரிசூல் கணபதி அட்டகாசமான கோலாக மாற்றினார். அதனால் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டின. இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க மேற்கொண்ட பல முயற்சிகள் வீணாகின. அவ்வப்போது கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளும் கோலாக மாறவில்லை. ஒன்றிய தலைமைச் செயலக அணியின் ஆதிக்கம் மெல்ல மெல்ல தளர்ந்த நிலையில் ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் கர்நாடகாவுக்கு மீண்டும் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

அதை சரியாக பயன்படுத்தி அந்த அணியின் வீரர் பிரணாம் கௌடா கோலடித்து அசத்தினர். ஆட்ட நேர முடிவில் ஹாக்கி கர்நாடகா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. பஞ்சாப் வெற்றி: நேற்று நடந்த 2வது லீக் ஆட்டத்தில் பி பிரிவில் உள்ள பஞ்சாப் தேசிய வங்கி – இந்திய ராணுவம் (சிவப்பு) அணிகள் மோதின. அதில் பஞ்சாப் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் குர்சிம்ரன் சிங் 37 வது நிமிடத்திலும் (பெனால்டி கார்னர்), சச்சின் 58வது நிமிடத்திலும் (ஃபீல்டு கோல்) அபாரமாக கோல் போட்டனர். இந்திய ராணுவம் தரப்பில் 47வது நிமிடத்தில் ராஜந்த் ஒரு ஃபீல்டு கோல் அடித்தார்.

The post முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி ஒன்றிய தலைமைசெயலகத்தை போராடி வென்றது கர்நாடகா appeared first on Dinakaran.

Tags : Murukappa Gold Cup Hockey Union HQ ,Karnataka ,Chennai ,Murukappa Gold Cup ,Hockey Karnataka ,Union Secretariat ,Murukappa Gold ,Cup ,Hockey Union Secretariat ,Dinakaran ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடிய கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர்கள்