×

நிலவின் ரகசியங்களை ‘ரோவர்’ தேடி வருகிறது: இஸ்ரோ அதிகாரிகள் தகவல்

சென்னை: ‘‘நிலவில் அறிவியல் ஆய்வை மேற்கொள்ளும் ரோவர், தென் துருவத்தில் நிலவின் ரகசியங்களை தேடி வருகிறது’’ என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான்-3 விண்கலத்தின் விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. அதில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவரும் நிலவில் ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது. அங்கு 14 நாட்கள் தகவல்களை சேகரிக்கும். இந்நிலையில் சந்திரயான் 3 திட்டத்தின் குறிக்கோள்கள் சரியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நிலவில் ரோவர் உலா வரும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவு: சந்திரயான்-3 திட்டத்தின் 3 குறிக்கோள்களில் 2 வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. நிலவின் நிலப்பரப்பில் பாதுகாப்பாகவும், மென்மையாகவும் லேண்டரை தரையிறக்குவது, ரோவரை நிலாவில் உலாவ விடுதல் ஆகியவை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.ரோவர் அறிவியல் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து கருவிகளும் சீராக செயல்படுகிறது. மேலும் தென் துருவத்தில் நிலவின் ரகசியங்களை தேடி லேண்டர் தரையிறக்கப்பட்ட சிவ சக்தி புள்ளியை சுற்றி ரோவர் உலா வருகிறது.

The post நிலவின் ரகசியங்களை ‘ரோவர்’ தேடி வருகிறது: இஸ்ரோ அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : ISRO ,Chennai ,Moon ,Dinakaran ,
× RELATED சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப்...