×

கடும் மழையால் மண் சரிவு மேகாலயா துண்டிக்கப்பட்டது

ஷில்லாங்: கடும் மழையால் ஏற்பட்ட மண் சரிவால் மேகாலயா உள்பட 4 மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடைபட்டுள்ளது. மேகாலயாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் தேசிய நெடுஞ்சாலை எண் 6ல் உள்ள சோனாப்பூர் சுரங்கம் அருகே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், 2 வாகனங்கள் சிக்கி உள்ளன.

இதனால் அந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இது திரிபுரா,மிசோரம், அசாம் ஆகிய மாநிலங்களுடன் மேகாலயாவை இணைக்கும் முக்கிய சாலை. மண் சரிவால் இந்த மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

The post கடும் மழையால் மண் சரிவு மேகாலயா துண்டிக்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Meghalaya ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...