×

வருமானவரித்துறை இணையதளம் புதுப்பிப்பு

புதுடெல்லி: வருமான வரித்துறையானது பயனர்களின் வசதிக்காக புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை நேற்று தொடங்கியுள்ளது. ராஜஸ்தானின் உதய்பூரில் வருமான வரித்துறை சார்பாக சிந்தன் ஷிவர் என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் வருமான வரித்துறையின் புதுப்பிக்கப்பட்ட இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டது. ஒன்றிய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா இதில் கலந்து கொண்டு புதிய இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

இது குறித்து நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வரி செலுத்துவோரின் அனுபவத்தை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பத்தின் வேகத்தை தக்க வைக்கவும், வருமான வரித்துறையானது தனது தேசிய இணையதளத்தினை பயனாளர்களின் வசதி, மதிப்புகூட்டப்பட்ட அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளமானது மொபைலுக்கு ஏற்ற தளவடிவமைப்புடன் மறுவடிவமைக்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post வருமானவரித்துறை இணையதளம் புதுப்பிப்பு appeared first on Dinakaran.

Tags : Income Tax Department ,New Delhi ,Sindan ,Udaipur, Rajasthan ,Dinakaran ,
× RELATED நேரடி வரிவசூல் ₹4.62 லட்சம் கோடி: வருமான வரித்துறை தகவல்