×

ஜம்முவில் ராகுலுடன் சோனியா படகு சவாரி

ஸ்ரீநகர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி தனிப்பட்ட பயணமாக நேற்று ஜம்மு வந்தார். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை கட்சியின் முக்கிய தலைவர்கள் வரவேற்றனர். இதனை தொடர்ந்து சோனியாகாந்தி, கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் தனது மகனான ராகுல்காந்தியுடன் நைஜீன் ஏரியில் அவர் தங்கியிருக்கும் படகுவீட்டிற்கு சென்றுவிட்டார்.

பின்னர் அங்கு இயற்கை எழிலை கண்டு ரசித்த சோனியாகாந்தி, மகன் ராகுலுடன் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தார். சோனியா மற்றும் ராகுல் இன்று குல்மார்க்கை பார்வையிடவும் திட்டமிட்டுள்ளனர். இவர்களின் இந்த பயணத்தில் சோனியாவின் மகளான பிரியங்கா காந்தி அவரது கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோரும் இணையக்கூடும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

The post ஜம்முவில் ராகுலுடன் சோனியா படகு சவாரி appeared first on Dinakaran.

Tags : Rahul ,Jammu ,Srinagar ,Former ,Congress ,President ,Sonia Gandhi ,Dinakaran ,
× RELATED மோசமான வானிலை : அனந்தநாக் – ரஜோரி தேர்தல் தேதி மாற்றம்