×

எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்காத தெலங்கானா முதல்வருக்கும் பா.ஜவுக்கும் புரிதல் உள்ளது: கார்கே குற்றச்சாட்டு

ஐதராபாத்: தெலங்கானா முதல்வருக்கும் பா.ஜவுக்கும் நல்ல புரிதல் உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டினார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் செவெல்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மோடி அரசுக்கு எதிராக 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராடின. ஆனால் தன்னை மதச்சார்பற்றவர் என்று சொல்லிக்கொள்ளும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஒரு கூட்டத்தில் கூட பங்கேற்கவில்லை.

பாஜவை தோற்கடிக்க மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமை குறித்து கேசிஆர் ஒருபோதும் பேசவில்லை. இங்கே உங்களை மதச்சார்பற்ற கட்சி என்று சொல்கிறீர்கள். ஆனால், உள்ளே இருந்து பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் எஸ்சிகளுக்கான இடஒதுக்கீடு 18 சதவீதமாகவும், எஸ்டியினருக்கு 12 சதவீதமாகவும் உயர்த்தப்படும். இதுதவிர எஸ்சி மற்றும் எஸ்டி குடும்பங்களுக்கு ரூ.12 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

The post எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்காத தெலங்கானா முதல்வருக்கும் பா.ஜவுக்கும் புரிதல் உள்ளது: கார்கே குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Telangana ,chief minister ,BJP ,Kharge ,Hyderabad ,Congress ,Karke ,
× RELATED தமிழ் மக்களுடன் பொங்கல் கொண்டாடுவதில் மகிழ்ச்சி: பிரதமர் மோடி உரை!