×

30 ஆண்டு கோரிக்கை நிறைவேறுகிறது வளைவான கணவாய் சாலையை சீர்செய்ய உத்தரவு

*கலெக்டர் ஆய்வு

தர்மபுரி : தர்மபுரியிலிருந்து மொரப்பூர் -அரூர் வழியாக திருவண்ணாமலை வரையிலும் ₹1200 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தர்மபுரி -மொரப்பூர் -அருர் வழியாக திருவண்ணாமலைக்கும், தர்மபுரி -ஒடசல்பட்டி கூட்டு சாலை, கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி வழியாக சாமியாபுரம் கூட்டு ரோடு வரைக்கும், தர்மபுரி -ஒடசல்பட்டி கூட்டு சாலை, கடத்தூர், பொம்மிடி, டேனிஷ்பேட்டை வழியாக தீவட்டிப்பட்டி வரையிலும், தர்மபுரி -மூக்கனுர் -தின்னப்பட்டி, ஒட்டப்பட்டி, துறிஞ்சிப்பட்டு, சின்னேரி மோட்டுப்பட்டி, கிருஷ்ணாபுரம் வரையிலும், தர்மபுரி -ஒடசல்பட்டி கூட்டுசாலை, ராணி மூக்கனூர், சிந்தல்பாடி, பெத்தூர் வழியாக அரூர் வரையிலும், தர்மபுரி சோலைக்கொட்டாய் மூக்கனூர் -ஒடசல்பட்டி குண்டல்பட்டி வழியாக கம்பைநல்லூர் வரையிலும் செல்ல முக்கிய போக்குவரத்து கேந்திரமாக இச்சலைலை விளங்குகிறது.

தினந்தோறும் இந்த சாலையின் வழியாக ஆயிரக்கணக்கான டூவீலர், பேருந்துகள், கார், சரக்கு வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், மொரப்பூர் மற்றும் பொம்மிடி ரயில் நிலையங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் கணவாய் சாலை வழியாக கடந்து பயணிக்கின்றனர். பிரசித்திப்பெற்ற வழிபாட்டு தலங்களான மணியம்பாடி வெங்கட்ரமண சுவாமி கோயில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் சுவாமி கோயில்களுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

பிரபல சுற்றுலா தலங்களான ஏற்காடு, தென்கரைக்கோட்டை அரண்மனைகளை காண்பதற்காக தினசரி அவ்வழியாக மக்கள் அலையலையாக செல்கின்றனர். வத்தல்மலை, சித்தேரி சுற்றுலா தலங்களுக்கு தினசரி மக்கள் ஒடசல்பட்டி கூட்ரோடு கணவாய் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். கணவாய் பகுதியானது மிக மிக வளைவான அபாயகரமான சாலையாகும். இந்த கணவாய் சாலையில் கடந்த 30 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்டவர்கள் விபத்தில் பலியாகியுள்ளனர். அதுமட்டுமின்றி வாகனங்களில் அடிபட்டு குரங்குகளும் உயிரிழந்து வருகின்றன. இந்த கணவாய் சாலையை நேராக்க வேண்டும் என்பது கடந்த 30 ஆண்டு கோரிக்கையாகும்.

இதுதொடர்பாக கடந்த வாரம் தர்மபுரி கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் அரசாங்கம் தலைமையில் அக்கட்சியினர் மாவட்ட கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆகியோரிடம் மனு அளித்தனர். இதையடுத்து, தர்மபுரி மாவட்டகலெக்டர் சாந்தி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் மூக்கனூர் தின்னப்பட்டி கணவாய் பகுதி வளைவு சாலையை நேரான சாலையாக மாற்றி அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்தார். அப்போது, விபத்துகளின் விவரங்களை அறிந்து வளைவு சாலையை நேரான சாலையாக மாற்றி அமைக்க நேடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, தர்மபுரி கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் அரசாங்கம், சொல்லின்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post 30 ஆண்டு கோரிக்கை நிறைவேறுகிறது வளைவான கணவாய் சாலையை சீர்செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kanai Road ,Darmapuri ,Morapur-Aur ,Tiruvannamalai ,Kangai Road ,
× RELATED தர்மபுரி அருகே பரபரப்பு கோவை நகைக்கடை...