×

ரயில் பெட்டியை பூட்டி கொண்டு சமைத்ததால் பயணிகள் வெளியேற முடியாமல் தீயில் சிக்கியுள்ளனர்: அமைச்சர் மூர்த்தி பேட்டி!

மதுரை: மதுரை ரயில் விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில், அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு மேற்கொண்டார். மதுரை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் மதுரை – போடி வழித்தடத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா பயணிகள் ரயில் இன்று அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் உத்தரபிரேச மாநிலத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். 6-ருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட உடனேயே ஏராளமான பயணிகள் தப்பியோடியுள்ளனர்.

மேலும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வந்துள்ளார். மீட்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்; உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் யாத்திரைக்காக ரயிலில் தமிழகம் வந்துள்ளனர். விபத்து நேர்ந்த தகவல் கிடைத்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில், மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 55 பயணிகள் ரயிலில் பயணம் செய்த நிலையில், காலை 4:30 மணியளவில் விபத்து நேர்ந்துள்ளது. டீ அருந்துவதற்காக காலையில் சிலிண்டரை பத்த வைத்துள்ளனர். வட மாநிலங்களைப் போல கொள்ளையர்கள் ரயிலில் ஏறி விடுவார்கள் என்கிற அச்சத்தில் ரயில் பெட்டியை பயணிகள் பூட்டி வைத்துள்ளனர். ரயில் பெட்டியை பூட்டிக்கொண்டு சமைத்ததால், திடீரென சிலிண்டர் வெடித்ததில் வெளியேற முடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்ல தடை உள்ள நிலையில் தடையை மீறி சிலிண்டரை ரயிலில் எடுத்து சென்றுள்ளனர். சிலிண்டர் வெடித்ததில் தற்போது வரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். மீதம் உள்ளவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். காவல்துறை மற்றும் ரயில்வேதுறை அதிகாரிகள் ரயிலில் சிக்கிய பயணிகளை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ரயிலில் பயணித்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

 

The post ரயில் பெட்டியை பூட்டி கொண்டு சமைத்ததால் பயணிகள் வெளியேற முடியாமல் தீயில் சிக்கியுள்ளனர்: அமைச்சர் மூர்த்தி பேட்டி! appeared first on Dinakaran.

Tags : Minister ,murthy ,Madurai ,Moorthi ,MURTHI ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...