×

பெரம்பலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன், மதனகோபால சுவாமி கோயில்களில் வரலட்சுமி நோன்பு

பெரம்பலூர்,ஆக.26: பெரம்பலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில், மதனகோபால சுவாமி கோயில்களில் 500 க்கும் மேற்பட்ட சுமங்கலிப் பெண்கள் திரண்டு வரலட்சுமி நோன்பு கொண்டாடினர். மூத்த சுமங்கலிகளின் மூலம் கைகளில் மஞ்சள் கயிற்றை அணிந்து கொண்டனர். வரலட்சுமி நோன்பு விழா ஒவ்வொரு வருடமும் ஆடி மாத வெள்ளிக்கிழமையில் வரும் இந்த வருடம் ஆடி மாதத்தில் 2 அமாவாசை வந்த காரணத்தால், ஆனி மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையான நேற்று(25ம் தேதி) வரலட்சுமி நோன்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதனை யொட்டி நேற்று(25ம்தேதி) பெரம்பலூர் பூசாரித் தெரு வில் உள்ள அருள்மிகு வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வரலட்சுமி பண்டி கையை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட சுமங்கலிப் பெண்கள் விரதமிருந்து மலர்களால் அர்ச்சனை செய்துவழிபாடு செய்தனர். பூஜைகளை கோயில் பூசாரி கணேஷ் செய்திருந்தார்.

பெரம்பலூர் மரகதவள்ளி தாயார் சமேத  மதனகோபால சுவாமி கோயிலில் நேற்று (25ம்தேதி) காலை 9 மணி முதல் 10:30 மணி வரை வரலட்சுமி விரத (நோன்பு) விழாவை முன்னிட்டு னிவாச பெருமாள் சன்னதி முன்பு கலசத்தில் வரலெட்சுமி அலங்காரம் செய்விக்கப்பட்டு 300க்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள் திரளாகக் கலந்து கொண்டுஅங்கு கலசத்தில் அலங்கரித்த மகாலட்சுமியை வாசனை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்ட னர். பின்னர் மூத்த சுமங் கலி பெண்களிடம் நோன்பு கயிறைக் கொடுத்து கை களில் அணிவிக்கச் செய்து ஆசீர்வாதம் பெற்று நோன்பை நிறைவு செய்தனர். விழா ஏற்பாடுகளை தக்கார்லட்சுமணன், செயல் அலுவலர் கோவிந்தராஜ் செய்திருந்தனர். விழாவில் பெரம்பலூர், அரணாரை, துறைமங்கலம், எளம்ப லூர், பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டாரக் கிராம சுமங்கலிகள் தங்களது கணவர்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந் தைகளுக்கு கல்விச் செல் வம் மற்றும் பொருட்செல் வம் என்றும் கிடைத்திட மகாலட்சுமியை மனதார உருகி வழிபாடு செய்தனர்.

The post பெரம்பலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன், மதனகோபால சுவாமி கோயில்களில் வரலட்சுமி நோன்பு appeared first on Dinakaran.

Tags : Varalakshmi ,Perambalur Kanika Parameshwari Amman ,Madanagopala Swamy Temples ,Perambalur ,Sumankalip ,Perambalur Kanika Parameshwari Amman temple ,
× RELATED வெயிலில் சுருண்டு விழுந்து ஆடு மேய்த்தவர் பரிதாப பலி