×

கால்நடை வளர்ப்போர் வசதிக்காக அம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசி முகாம்

முத்துப்பேட்டை, ஆக. 26: முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கோவிலடி, இடையர்காடு, மேலக்காடு, இந்திரா காலனி, துறைதோப்பு கிராமங்களில் கால்நடைகளுக்கு அம்மை நோயிக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது. முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் ஊராட்சியில் தில்லைவிளாகம் கோவிலடி, இடையர்காடு, மேலக்காடு, இந்திரா காலனி மற்றும் துறைதோப்பு கிராமங்களில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை வளர்ப்போர்கள் வசதிக்காக அம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.

இதில் சுற்று பகுதி குக்கிராமங்களில் உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு அம்மைநோய் தடுப்பூசியும், ஆடுகளுக்கு குடல் புழு நீக்க மருந்தும் வழங்கப்பட்டது. இதில் அந்தந்த பகுதிகளுக்கே சென்று கால்நடை மருத்துவர் டாக்டர் மகேந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவில் கால்நடை ஆய்வாளர் நிர்மலா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பிரசன்னா மாதவன், மகாலட்சுமி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு அம்மை நோயிக்கு எதிரான தடுப்பூசி செலுத்தினர்.

The post கால்நடை வளர்ப்போர் வசதிக்காக அம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.

Tags : Muthupet ,Koviladi ,Athiyarkadu ,Melakadu ,Indira Colony ,Sarthoppa ,Thillavilagam ,Dinakaran ,
× RELATED கந்தப்பரிச்சான் ஆறு குறுக்கே ₹4.95 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்