×

சின்னசேலம் அருகே பரபரப்பு: வீட்டில் புகுந்து ரூ.3 லட்சம் நகை, பணம் கொள்ளை

 

சின்னசேலம், ஆக. 26: சின்னசேலம் அருகே பூட்டிய வீட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னசேலம் அருகே கீழ்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கருந்தலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ்குமார்(39). இவர் தனது மனைவி, மகனை பிரிந்து தற்போது தாயுடன் வசித்து வருகிறார். மேலும் வழக்கமாக இவரது தாய் சின்னம்மாள்(65) கீழ்வீட்டிலும், கணேஷ்குமார் மாடியிலும் படுத்துக்கொள்வது வழக்கம்.

அதேபோல நேற்று முன்தினம் இரவும் இவரது தாய் சின்னம்மாள் கீழ்வீட்டிலும், கணேஷ்குமார் மாடியிலும் படுத்து உறங்கிக்கொண்டிருந்த நிலையில் அன்று இரவு அதே பகுதியில் உள்ள உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால் சின்னம்மாள் துக்கம் விசாரிக்க சென்றுள்ளார். இந்நிலையில் இரவு சுமார் 2.25 மணியளவில் தண்ணீர் குடிக்க கணேஷ் எழுந்து வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடந்துள்ளது.

ஆனால், வீட்டில் சின்னம்மாள் இல்லை. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த கணேஷ்குமார் உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு பீரோவும் திறந்து கிடந்துள்ளது. அதில் இருந்த பணம் ரூ.70,000, ஐந்தே முக்கால் பவுன் நகை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து கணேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சின்னசேலம் அருகே பரபரப்பு: வீட்டில் புகுந்து ரூ.3 லட்சம் நகை, பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Bustle ,Chinnasalem ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ரூ.7...