×

வேடசந்தூர் அருகே சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு

வேடசந்தூர், ஆக. 26: வேடசந்தூரிலிருந்து வடமதுரை செல்லும் சாலையில் அமைந்துள்ளது பூத்தாம்பட்டி. இங்கு சாலையோரத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த 50 அடி உயரம் கொண்ட வேலா மரம் இருந்தது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் பலத்த காற்று வீசியது. இந்த காற்றின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வேலா மரம் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தது. இதனால் வேடசந்தூரில் இருந்து வடமதுரை செல்லும் பேருந்துகள் மற்றும் தொழிற்சாலை பணிகளுக்கு ஆட்களை ஏற்றிச்செல்லும் வேன்கள், டூவீலர்கள், கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்ல முடியாமல் தடை ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் வேடசந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த வேடசந்தூர் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு மரம் அறுக்கும் இயந்திரங்களைக் கொண்டு சாலையில் சாய்ந்த மரத்தினை அகற்றினர். இருப்பினும் இந்த பணிகள் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் இச்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வாகனங்கள நீண்ட வரிசையில் காத்திருந்தன.

The post வேடசந்தூர் அருகே சாலையின் குறுக்கே முறிந்து விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Vedasandur ,Puthampatti ,Vadamadurai ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை