×

கோடங்கிபாளையம் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்

 

பல்லடம், ஆக.26:பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்க விழா ஊராட்சி மன்ற தலைவர் காவி.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி துணைத்தலைவர் லலிதாம்பிகை செல்வராஜ், ஒன்றிய பொறியாளர் செந்தில்வடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் கல்குவாரி மற்றும் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், குணசேகரன், அப்புக்குட்டி,கருப்புசாமி,துரைபிரகாஷ், பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் அவைத்தலைவர் சாமிநாதன்,ஒன்றிய துணை செயலாளர் ஆட்டோ குமார்,ஒன்றிய பொருளாளர் டி.குமார், முன்னாள் மாவட்ட பிரதிநிதி சாமியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கோடங்கிபாளையம் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Kodangipalayam ,School ,Palladam ,Chief Minister ,Kodankipalayam ,Dinakaran ,
× RELATED பெண் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் கைது