×

வடமாநில தொழிலாளி தற்கொலை

 

ஈரோடு,ஆக.26: மேற்கு வங்க மாநிலம், பர்கானா மேற்கு மாவட்டம், தெற்கு பல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிச்யுமண்டல்(46). இவரது மகன் சம்ரேஷ் மண்டல் (19).இருவரும், கடந்த ஒரு மாதமாக ஈரோடு திண்டல், மாருதி நகரில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தனர். சம்ரேஷ் மண்டல் சரிவர வேலைக்கு செல்லாமல் எப்போதும் போன் பேசிக் கொண்டே இருந்தாராம்.மேலும், தந்தையிடம் கடந்த 23ம் தேதி செலவுக்கு பணம் கேட்டாராம்.ஆனால், ரிச்யுமண்டல் செலவுக்கு பணம் கொடுக்காமல் வேலைக்கு சென்றுவிட்டாராம். மீண்டும் அவர் மதியம் சாப்பிட வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்துள்ளது.

ஆனால், கதவைத் தட்டிப் பார்த்தும் திறக்காததால் அதை உடைத்து பார்த்த போது, வீட்டினுள் சம்ரேஷ் மண்டல் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சம்ரேஷ் மண்டலை பரிசோ தித்த மருத்துவர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்து, ரிச்யுமண்டல் நேற்று முன் தினம் அளித்த புகாரின் பேரில், ஈரோடு வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

The post வடமாநில தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Erode ,Richumandal ,Balpur South, Pargana West District, West Bengal ,Dinakaran ,
× RELATED போலி உரம், பூச்சிக்கொல்லி மருந்து...