×

கடற்கரையில் இருந்து பறக்கும் ரயில் சேவை ரத்து சென்ட்ரல் செல்லும் பேருந்துகள் சிந்தாதிரிப்பேட்டைக்கு இயக்கம்: ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரை

 

சென்னை, ஆக.26: சென்ட்ரல் செல்லும் பேருந்துகளை சிந்தாதிரிப்பேட்டை செல்லும் வகையில் இயக்க ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரைத்துள்ளது. சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே நான்காவது ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதன் காரணமாக, சென்னை கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையிலான பறக்கும் ரயில்கள் நாளையுடன் நிறுத்தப்பட்டுகிறது. இதனையடுத்து 27ம் தேதி முதல் சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்தது.

இந்நிலையில் பொதுமக்கள் பறக்கும் ரயில் சேவையை எளிதாக அணுக அண்ணா சாலையிலிருந்து சென்ட்ரல் செல்லும் அனைத்து பேருந்துகளையும் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் சென்று வரும் வகையில் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பறக்கும் ரயில் சேவை மாற்றம் காரணமாக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் இதற்கு பரிந்துரை செய்துள்ளது.

சிந்தாதிரிப்பேட்டைக்கு அதிக பேருந்துகள் செல்லும் வகையில் சில பாதைகளை மாற்றி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பான அறிவிப்பை மாநகர போக்குவரத்து கழகம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கடற்கரையில் இருந்து பறக்கும் ரயில் சேவை ரத்து சென்ட்ரல் செல்லும் பேருந்துகள் சிந்தாதிரிப்பேட்டைக்கு இயக்கம்: ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : bound Buses ,Chindathiripet ,Integrated Transport Group ,Chennai ,Integrated Transport Corporation ,Chennai… ,Dinakaran ,
× RELATED ரத்தம் சிந்தி பெற்ற தொழிலாளர்...