×

நிலவை ஆய்வு செய்யும் தூத்துக்குடி நாசரேத்தில் தயாரான உதிரிபாகங்கள்

நாசரேத்: இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் கடந்த 23ம் தேதி மாலையில் தரையிறங்கியது. அன்று இரவு விக்ரம் லேண்டரில் இருந்து வெற்றிகரமாக பிரக்யான் ரோவர் வெளியே வந்து நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்நிலையில் சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவரில் லேசர் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய சென்சார் உதிரி பாகங்கள் மற்றும் வேகத்தை கட்டுப்படுத்த கூடிய சர்வோ ஆக்ஸிலரோ மீட்டருக்கான உதிரிபாகங்கள், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் உள்ள ஆர்ட் தொழிற்பயிற்சி மையத்தில் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து நாசரேத் ஆர்ட் தொழில் பயிற்சி மைய தாளாளர் ஐசக் ராஜதுரை கூறியதாவது: நாசரேத் ஆர்ட் தொழிற்பயிற்சி மையத்தில் கடந்த 38 ஆண்டுகளாக விண்வெளி உபகரணங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது மைக்ரான் அளவுகளில் இயந்திரங்களில் தயாரிக்கப்பட்டு தரக்கட்டுப்பாட்டு துறையில் நுண்ணிய முறையில் அளவீடு செய்யப்பட்டு சிறந்ததொரு உதிரிபாகமாக உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியா அனுப்பியுள்ள சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவரில் எங்கள் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள உதிரிபாகங்கள் பொருத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது, மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post நிலவை ஆய்வு செய்யும் தூத்துக்குடி நாசரேத்தில் தயாரான உதிரிபாகங்கள் appeared first on Dinakaran.

Tags : Tuticorin Nazareth ,Nazareth ,India ,Vikram… ,Tuticorin ,
× RELATED நாசரேத் நூலகத்தில் கவியரங்க நிகழ்ச்சி