×

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றியை எதிர்த்து வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்த்த வழக்கில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேர்தல் ஆணையம் ஆகியோர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மரணம் அடைந்ததையடுத்து, அந்த தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், இளங்கோவனின் வெற்றியை எதிர்த்து அத்தொகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட பி.விஜயகுமாரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் உள்ளார். அந்த மனுவில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ஆகியோருக்காக பிரசாரம் செய்யப்பட்டபோது பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளன. அதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல்வேறு முறைகேடு. எனவே, தேர்தலிலும் செல்லாது, ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றதும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறியிரிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், இந்திய தேர்தல் ஆணையம், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

The post ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றியை எதிர்த்து வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : EVKS Ilangovan ,Erode East ,EC ,Chennai ,Congress MLA ,EVKS Elangovan ,AIADMK ,Southern State ,Election Commission ,Dinakaran ,
× RELATED கார்த்தி சிதம்பரம் துரோகம்...