- டி.கே.சிவகுமார்
- பெங்களூரு
- கர்நாடக
- துணை முதலமைச்சர்
- நீர்வளத்துறை அமைச்சர்
- டி.கே. சிவகுமார்
- காவிரி
- கே. சிவகுமார்
- தின மலர்
![]()
பெங்களூரு: பெங்களூருவில் கர்நாடக துணை முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சருமான டிகேசிவகுமார் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீரை பங்கீடுவதில் பிரச்னை உள்ளது. மழை அதிகம் பெய்தால் எவ்வித பிரச்னையும் ஏற்படாது. மழை அளவு குறையும் காலத்தில் நீரை பங்கீடுவதில் பிரச்னை ஏற்படுகிறது. இரண்டு மாநிலத்திற்கும் இடையே காணப்படும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு மேகதாது அணை மட்டுமே நிரந்தர தீர்வாக அமையும்.
மேகதாது அணை கட்டுவதால் சேமிக்கப்படும் தண்ணீரை குடிநீருக்காக மட்டுமே கர்நாடக பயன்படுத்த முடியும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நாம் மதித்து காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி நீரை திறந்து விடுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் ஆதாயத்திற்காக இதை பயன்படுத்திக்கொள்வதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். ஆனாலும் நீதிமன்றத்தின் உத்தரவை நாங்கள் மதித்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளோம். அதே நேரம் நமது மாநில விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும் காங்கிரஸ் அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு டிகே சிவகுமார் கூறினார்.
The post நீதிமன்ற உத்தரவை மதித்து காவிரியில் தண்ணீர் திறப்பு: டி.கே.சிவகுமார் பேட்டி appeared first on Dinakaran.

