×

தேசிய அளவில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு உயரிய ஊக்கத்தொகை ரூ.5 லட்சமாக உயர்வு

சென்னை: விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்க 2019ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. அதில், ஒலிம்பிக், உலகக்கோப்பை, காமன்வெல்த் ஆசிய மற்றும் தெற்காசிய விளையாட்டு, அகில இந்திய பல்கலைக்கழங்களுக்கு இடையேயான போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் இடம்பெற்றிருந்தன.

தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கும் பிரிவு இடம்பெறவில்லை. அக்குறையை களைய நடவடிக்கை எடுக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகள் மூத்தோர் பிரிவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வெல்பவருக்கு உயரிய ஊக்கத்தொகைகள் முறையே ரூ.5 லட்சம், ரூ.3. லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் எனவும் இளையோர் பிரிவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வெல்பவருக்கு உயரிய ஊக்கத்தொகைகள் முறையே ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம் மற்றும் ரூ.1.50 லட்சம் என வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

The post தேசிய அளவில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு உயரிய ஊக்கத்தொகை ரூ.5 லட்சமாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : PwD ,Chennai ,Sports Development Department ,Government of Tamil Nadu ,
× RELATED 24 நாட்களில் 8,465 கி.மீ. பயணம் உதயநிதி...