×

ஓட்டபந்தயத்தில் பங்கேற்ற மாணவன் மயங்கி சாவு: முதல்வர் இரங்கல் ; ரூ.3 லட்சம் நிதியுதவி

தரங்கம்பாடி: மயிலாடுதுறை அருகே பள்ளிகளுக்கிடையே நடந்த ஓட்டபந்தயத்தில் ஓடிய மாணவன் பாதியில் மயங்கி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கருவிழுந்தநாதபுரம் வடக்குதெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ஸ்தபதி. இவர்களது மகன் ரிஷிபாலன் (17). செம்பனார்கோயிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்றுமுன்தினம் காட்டுச்சேரியில் உள்ள அரசு விளையாட்டு அரங்கில் பள்ளிகளுக்கு இடையேயான மண்டல விளையாட்டு போட்டி நடைபெற்றது. அதில் 400 மீட்டர் ஓட்டபந்தயத்தில் ரிஷிபாலன் கலந்து கொண்டு ஓடினார். அப்போது திடீரென பாதியில் மயங்கி கீழே விழுந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், மாணவனை மீட்டு பொறையார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாணவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பொறையார் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, பள்ளி நிர்வாகத்தினர் அலட்சியத்தால் தான் மாணவன் உயிரிழந்ததாக கூறி மாணவனின் உறவினர்கள், பொதுமக்கள் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மயிலாடுதுறை டிஎஸ்பி சஞ்சீவ்குமார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த துயரமான நேரத்தில், மாணவன் ரிஷிபாலனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரிவித்து உள்ளார்.

The post ஓட்டபந்தயத்தில் பங்கேற்ற மாணவன் மயங்கி சாவு: முதல்வர் இரங்கல் ; ரூ.3 லட்சம் நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : Mangi Sawu ,tharangambadi ,Mayiladuthara ,Dinakaran ,
× RELATED பறக்கும் படை சோதனையில் சிக்கிய ₹3.31...