×

வட்டார கல்வி அலுவலர் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு

சென்னை: வரும் செப்.10ம் தேதி நடைபெற உள்ள வட்டார கல்வி அலுவலர் பணிகளுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 2019-20, 2021-22ம் ஆண்டுக்கான வட்டாரக் கல்வி அலுவலர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அடுத்த மாதம் செப்.10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கு 42 ஆயிரத்து 712 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் https://www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், தேர்வர்கள் தேர்வுக்கு ஒரு வார காலத்துக்கு முன்னதாகவே பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்றும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

The post வட்டார கல்வி அலுவலர் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Halticket ,Education ,Chennai ,Selection Board ,Haltikett ,National Education ,Dinakaran ,
× RELATED ஐகோர்ட் தீர்ப்பின்படி நிலுவையில்...