×

வாக்னர் கூலிப்படை தலைவர் பலியான விமான விபத்தில் புடினுக்கு தொடர்பு இல்லை: ரஷ்யா மறுப்பு

மாஸ்கோ: வாக்னர் கூலி படை தலைவர் பிரிகோஸின் விமான விபத்தில் பலியான சம்பவத்தில் ரஷ்ய அதிபருக்கு தொடர்பு இல்லை என புடினின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வாக்னர் கூலி படை போரிட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் வாக்னர் படை தலைவனான பிரிகோஸின் புடினுக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டார். பின்னர் புடினுடன் அவர் சமரசம் செய்தார். கடந்த புதனன்று பிரிகோஸின் மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு விமானத்தில் சென்ற போது விமானம் நொறுங்கி விழுந்தது. இதில்பிரிகோஸின் உள்ளிட்ட 10 பேர் பலியானார்கள்.

இதுகுறித்து அமெரிக்க, மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகள் கூறுகையில்,‘‘ இது விபத்து அல்ல, ஏவுகணை மூலம் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. தனக்கு எதிரானவர்களை அழித்து விடுவது என்பது புடினின் நீண்ட கால வரலாறு. அதே போல் பிரிகோஸின் குறி வைத்து கொல்லப்பட்டுள்ளார்’’ என்றனர். புடினின் செய்தி தொடர்பாளர் டிமெட்ரி பெஸ்கோ கூறுகையில்,‘‘விபத்து குறித்து ஏராளமான யூகங்களை மேற்கத்திய நாடுகள் பரப்புகின்றன. விமான விபத்துக்கும் அதிபர் புடினுக்கும் தொடர்பு இல்லை’’ என்றார்.

The post வாக்னர் கூலிப்படை தலைவர் பலியான விமான விபத்தில் புடினுக்கு தொடர்பு இல்லை: ரஷ்யா மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Putin ,Wagner ,Russia ,Moscow ,Brigos ,Dinakaran ,
× RELATED 5வது முறையாக ரஷ்ய அதிபராக புடின்...