×

நிலவில் தரையிறங்கி உள்ள விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்த சந்திரயான் – 2 விண்கலத்தின் ஆர்பிட்டர்; புகைப்படங்களை பகிர்ந்தது இஸ்ரோ..!!

ஸ்ரீஹரிகோட்டா: நிலவில் தரையிறங்கி உள்ள விக்ரம் லேண்டரை சந்திரயான் – 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்துள்ளது. இந்த புகைப்படங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது. நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதன் வாயிலாக, அமெரிக்கா, சீனா மற்றும் முந்தைய சோவியத் யூனியனுக்கு பின், நிலவில் தரை இறங்கிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறி, பிரக்யான் ரோவர் நிலவில் நடைபயணம் மேற்கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, சந்திரயான் 3 திட்டம் வெற்றிபெறுவதற்கு சந்திரயான் 2 ஒரு முக்கிய காரணம். அதில் ஏவப்பட்ட ஆர்பிட்டர் இன்றும் நிலவை சுற்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நிலவை சந்திரயான் 3 நெருங்கியவுடன் அதை வரவேற்றதே சந்திரயான் 2 இன் ஆர்பிட்டர்தான். அது சரியாக வேலை செய்து வந்ததால்தான் சந்திரயான் 3 இல் ஆர்பிட்டரையே வைக்காமல் இஸ்ரோ அனுப்பி இருக்கிறது.

சந்திரயான் 2 இன் ஆர்பிட்டர் வழங்கிய தெளிவான வழிகாட்டுதல்களால்தான், சந்திரயான் 3 முறையாக நேர்த்தியாக தரையிறங்கி இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், லேண்டரை சந்திரயான்-2 ஆர்பிட்டர் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ஆக.23ம் தேதி இரவு 10.17 மணிக்கு லேண்டரை சந்திராயன்-2 ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்தது. நிலவில் சந்திரயான்-3 லேண்டரை சந்திரயான்-2 ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்துள்ளது. “நான் உன்னை உளவு பார்க்கிறேன்” என சந்திரயான் – 2 ஆர்பிட்டர், லேண்டரிடம் கூறுவது போல் பதிவிடப்பட்டுள்ளது.

The post நிலவில் தரையிறங்கி உள்ள விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்த சந்திரயான் – 2 விண்கலத்தின் ஆர்பிட்டர்; புகைப்படங்களை பகிர்ந்தது இஸ்ரோ..!! appeared first on Dinakaran.

Tags : Chandrayan ,Moon ,Chandrayaan ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...