×

அழகர்கோவிலில் யானைக்கு மருத்துவ பரிசோதனை: சிறப்பு குழுவினர் பங்கேற்பு

 

அழகர்கோவில், ஆக. 25: அழகர்கோவில் யானைக்கு கால்நடை டாக்டர்கள் கொண்டு சிறப்பு குழுவினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அழகர்கோவிலில் கள்ளழகர் கோயில் நிர்வாகத்தின் சார்பில் சுந்தரவல்லி என்ற 16 வயது பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. கோயிலில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் இந்த யானை பங்கெடுப்பது வழக்கம். இதற்கிடையே கோயில் யானைக்கு காலமுறை சுழற்சிப்படி, கால்நடை மருத்துவ குழுவினரால் பரிசோதனைகள் நடத்தப்படுவது வழக்கம்.

இதன்படி நேற்று மாவட்ட வளர்ப்பு யானைகள் நலம் மற்றும் கண்காணிப்பு குழுவின் தலைவரும், மாவட்ட வன அலுவலருமான குருசாமி மற்றும் மாவட்ட கால்நடை உதவி இயக்குனர் பழனியப்பன், கால்நடை மருத்துவர் உமா மகேஸ்வரி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வி ஆகியோர் கொண்ட குழுவினர் யானைக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

அப்போது சுந்தரவல்லி யானைக்கும், பாகனுக்கும் உள்ள இணைப்பு எந்த வகையில் உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை அவர்கள் மேற்கொண்டனர். மேலும் யானையை பராமரிக்கும் வழிமுறைகள், உணவு வழங்குவது, நடைபயிற்சி, பாதுகாப்புடன் இருப்பது, குறித்த ஆலோசனைகளையும் பரிசோதனை குழுவினர் வழங்கினர். இந்த நிகழ்வில் அழகர்கோவில் துணை ஆணையர் ராமசாமி, கண்காணிப்பாளர் பிரதிபா மற்றும் கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

The post அழகர்கோவிலில் யானைக்கு மருத்துவ பரிசோதனை: சிறப்பு குழுவினர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Alaghar temple ,Alagarkoil ,Alagharkovil… ,Alagharkovil ,Dinakaran ,
× RELATED அழகர்கோவிலில் வசந்த விழா மே 14ல் துவக்கம்