×

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கம்பத்தில் கலெக்டர் ஆய்வு

கம்பம், ஆக. 25: தமிழ்நாட்டில் 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று மாநில முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் விரிவுபடுத்தப்படுகிறது. இதில் தேனி மாவட்டத்தில், கம்பம் நகராட்சி முகையதீன் ஆண்டவர்புரம் தொடக்க பள்ளி, போடிநாயக்கனூர் அரசு கள்ளர் துவக்கப்பள்ளி, ஆண்டிபட்டியில் தெப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பெரியகுளம் லட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் சட்டமன்ற உறுப்பினர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இந்நிலையில், நேற்று கம்பம் நகராட்சி மொகைதீன் ஆண்டவர்புரம் பகுதியில் உள்ள தொடக்க பள்ளியில் நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சி முன்னேற்பாடாக, பள்ளியில் உள்ள உணவுக்கூடம், மாணவர்கள் உணவருந்தும் இடம் உள்ளிட்ட பகுதிகளை கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், நகராட்சி ஆணையர் வாசுதேவன், பொறியாளர் ஐயனார், வட்டதர வளர்ச்சி அலுவலர் கோதண்டபாணி, கம்பம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாரத ராணி, திமுக மூத்த வழக்கறிஞர் துரை நெப்போலியன், நகர்மன்ற உறுப்பினர் சாதிக் கலந்து கொண்டனர்.

The post முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கம்பத்தில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Gampal ,Kambam ,Chief Minister ,Tamil Nadu ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை;...