×

நாசரேத் அருகே பட்டறை தொழிலாளி கொலைவழக்கில் மேலும் ஒருவர் கைது

நாசரேத், ஆக. 25: நாசரேத் அருகே கல் பட்டறை தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறியை சேர்ந்தவர் சின்னத்துரை மகன் செல்வதிரவியம் (32). கல் பட்டறை தொழிலாளியான இவர், கடந்த ஜூலை 16ம் தேதி இரவு மூக்குப்பீறி 4 கம்பி சாலையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நாசரேத் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். கடந்த மே மாதம் மூக்குப்பீறியில் உள்ள சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதத்தில் கொலை நடந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலை தெருவை சேர்ந்த முருகன் மகன் முத்து மனோகர் (21), திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் ராஜிவ் காந்தி நகரை சேர்ந்த ராமர் மகன் கருப்பசாமி (20), நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் கலைக்கோயில் நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் முப்பிடாதி ராஜா(22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த செய்துங்கநல்லூர் வடக்கு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த அய்யப்பன் மகன் மாரியப்பன் (22) என்பவரை போலீசார் கைது செய்து பாளை. மத்திய சிறையில் அடைத்தனர்.

The post நாசரேத் அருகே பட்டறை தொழிலாளி கொலைவழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Nazareth ,Nazareth.… ,
× RELATED சிலம்ப போட்டியில் வெற்றி: நாசரேத் மர்காஷிஸ் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு