×

பெட்டட்டி அரசு பள்ளியில் இன்று முதலமைச்சரின் காலை உணவு திட்டம்: சுற்றுலாதுறை அமைச்சர் பேட்டி

 

ஊட்டி, ஆக.25: நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெகதளா பேரூராட்சி பெட்டட்டி சுங்கம் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று (25ம் தேதி) துவங்கி வைக்கப்படுகிறது. இது குறித்து சுற்றுலாதுறை அமைச்சர் ராமசந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த 15ம் தேதி முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஸ்ரீமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கடந்த 16ம் தேதி காலை உணவு திட்டம் தொடங்கியது.

இத்திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 63 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற பகுதிகள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று 25ம் தேதி முதல் விரிவுப்படுத்தப்பட உள்ளது. அதனடிப்படையில் இத்திட்டத்தினை அனைத்து மாவட்டத்திலும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் தொடங்கி வைக்க அறிவுறுத்தப்படுள்ளது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் தொகுதிக்குட்பட்ட ஜெகதளா பேரூராட்சி பெட்டட்டி சுங்கம் அரசு பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் குன்னூர், கோத்தகிரி, ஊட்டி மற்றும் கூடலூர் வட்டாரங்களில் உள்ள 187 ஊராட்சி பள்ளிகளிலும், 80 பேரூராட்சிக்குட்பட்ட பள்ளியிலும், 23 நகராட்சிக்குட்பட்ட பள்ளியிலும் என மொத்தம் 290 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

The post பெட்டட்டி அரசு பள்ளியில் இன்று முதலமைச்சரின் காலை உணவு திட்டம்: சுற்றுலாதுறை அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Pettati Government School ,Ooty ,Pettatti ,Customs School ,Jagathala Municipality ,Coonoor Assembly Constituency ,Nilgiri District ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...