×

எதிர் எதிரே வாகனங்கள் செல்வதில் சிக்கல் குறுகலான மாலைக்கோடு முல்லை ஆற்றுப்பாலம் விரிவு படுத்த மக்கள் கோரிக்கை

அருமனை,ஆக.25: மாலைக்கோடு பகுதியில் இருந்து மஞ்சாலுமூடு நோக்கி செல்லும் சாலையின் குறுக்கே முல்லை ஆறு பாய்கிறது. முல்லையாறை தாண்டி செல்ல பல வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட பாலம் உள்ளது. இந்த பாலம் தற்போது இருக்கும் சாலையை விட குறுகலாக உள்ளது. மேலும் தற்போது பாலம் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது இதனுடைய உறுதித் தன்மையும் தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது. வாகனங்கள் செல்லும்போது அதிக அதிர்வுகளை கொடுக்கும் இப்பாலம் சுமார் 30 அடி உயரம் கொண்டது இப்பாலத்தின் வழியாக தினமும் 1,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. ஒரு வாகனம் எதிரே வரும்போது மற்ற வாகனங்கள் நிறுத்தி விட்டு பாலத்தை கடக்க வேண்டிய நிலை உள்ளது. வளைவான சாலை விரிவாகவும் பாலம் குறுகலாகவும் காணப்படுவதால் மக்கள் ஆற்றினுள் தவறி விழ அதிக வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் மின்விளக்குகளும் இப்பாலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உடனடியாக விரிவான ஒரு பாலத்தை அமைத்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள உதவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post எதிர் எதிரே வாகனங்கள் செல்வதில் சிக்கல் குறுகலான மாலைக்கோடு முல்லை ஆற்றுப்பாலம் விரிவு படுத்த மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mallakode Mullai river bridge ,Arumanai ,Mullai river ,Mallakode ,Manjalumud ,Mullaiara ,Mullai river bridge ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை