×

ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக கலகம் செய்த வாக்னர் கூலிப்படை தலைவன் உட்பட 10 பேர் விமான விபத்தில் பலி

மாஸ்கோ: ரஷ்யா- உக்ரைன் இடையே ஒன்றரை வருடத்துக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.இந்த போரில் ரஷ்ய படைகளுடன் வாக்னர் என்ற கூலி படையும் இணைந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஜூன் 23ம் தேதி ரஷ்ய அதிபருக்கு எதிராக பிரிகோசின் திடீரென கலகத்தில் ஈடுபட்டார். வாக்னர் கூலி படை ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள ரோஸ்டோவ் ஆன் டோன் நகரில் உள்ள ராணுவ தளத்தை கைப்பற்றியதாக அறிவித்தது.ரோஸ்டோவ் நகரில் இருந்து மாஸ்கோ நோக்கி வாக்னர் படை முன்னேற தொடங்கியதால் பதற்றம் ஏற்ப்பட்டது. இந்த கலகத்தின் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என புடின் சூளுரைத்தார்.

அண்டை நாடான பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாசென்கோ தலையிட்டு புடினுக்கும், பிரகோசினுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தி சமரசம் செய்து வைத்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு ஒரு தனியார் விமானம் சென்றது. மாஸ்கோவில் இருந்து 300 கிமீ தொலைவில் பறந்த போது விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 10 பேரும் பலியானார்கள். இதில் பிரிகோசினும் உயிரிழந்ததாக ரஷ்ய விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஆனால் விமானம் ரஷ்ய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

*ஆச்சரியம் இல்லை: ஜோ பைடன்
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவிக்கையில், ‘‘வாக்னர் தலைவர் பிரிகோஸின் மரணம் எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. அதிபர் பின்னணி இல்லாமல் ரஷ்யாவில் எதுவும் நடக்காது’’ என்றார்.

The post ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக கலகம் செய்த வாக்னர் கூலிப்படை தலைவன் உட்பட 10 பேர் விமான விபத்தில் பலி appeared first on Dinakaran.

Tags : Wagner ,President Putin ,Moscow ,Russia ,Ukraine ,President ,Putin ,Dinakaran ,
× RELATED உக்ரைன் போருக்கு மத்தியில் அணு ஆயுத போர் பயிற்சி: ரஷ்யா பகிரங்க அறிவிப்பு