×

நெல்லைக்கு ‘லைட் மெட்ரோவுக்கு’ பரிந்துரை

சென்னை: திருநெல்வேலிக்கு உயர்தர மெட்ரோ ரயிலுக்கு வாய்ப்பு இல்லை என முதற்கட்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ள நிலையில், லைட் மெட்ரோவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்களின் வசதியை எளிதாக்கவும், சாலை போக்குவரத்தால் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைப்பதற்காகவும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. அதன்படி முதல்கட்ட திட்டத்தில் 54.1 கிலோ மீட்டர் தொலைவிற்கு விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என 2 வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது.

சென்னையை தொடர்ந்து, மதுரை மற்றும் கோவையிலும் மெட்ரோ ரயில் சேவை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் அடுத்த 5 ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு அறிவிப்பின்படி சென்னையை போல தமிழகத்தின் முக்கிய நகரங்களான கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான ஆய்வுகளை மெட்ரோ நிர்வாகம் ஒவ்வொரு கட்டமாக செய்து வருகிறது.

கடந்த வாரம் சேலம், திருச்சியில் மேற்கொள்ளப்பட்டு வந்த முதல்கட்ட சாத்திய கூறு ஆய்வு பணிகளின் இறுதிக்கட்ட முடிவுகள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெல்லைக்கான ஆய்வு முடிவை தனியார் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. இதன்படி, நெல்லையில் உயர்தர மெட்ரோ ரயிலுக்கு வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. எனவே, முதல்கட்ட ஆய்வில் நெல்லைக்கு “லைட் மெட்ரோ” விற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post நெல்லைக்கு ‘லைட் மெட்ரோவுக்கு’ பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Light Metro ,Chennai ,Tirunelveli ,Light ,
× RELATED நீயும் நானும் வேற இல்ல காவலர் –...