சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் சென்னை யில் , நிருபர்களுக்கு அளித்த பேட்டி : தமிழ்நாடு அரசு செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி, சிறையில் இருந்து 700 சிறைவாசிகளை விடுதலை செய்ய திமுக அரசு ஆணையிட்டு உள்ளது. அவர்களுடன் சேர்த்து 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகள் 37 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்துவர்களுக்கு திமுக அரசு பாதுகாப்பாக உள்ளது. 700 பேரின் பெயர் பட்டியலை அனுப்பி வைத்தும் ஆளுநர் ஒவ்வொரு ஆட்களையும் ஆய்வு செய்து, இஸ்லாமியர்களை தவிர, மற்றவர்களை தான் விடுதலை செய்கிறார்கள். அரசு விரைவில் விடுதலை செய்ய உத்தரவிட்டாலும் அதற்கு ஒப்புதல் தர ஆளுநர் மாளிகை தாமதம் செய்கிறது.
The post இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதில் ஆளுநர் தாமதம்: திருமாவளவன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.