×

தமிழக மீனவர்களின் நலனை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக மீனவர்களின் நலனை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ” கோடியக்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதோடு படகில் வைத்திருந்த பொருட்களையும் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதலுக்கு தற்போது வரை தீர்வு எட்டப்படாத நிலையில், தற்போது கடற்கொள்ளையர்களும் தாக்குதல் நடத்தியிருப்பது மீனவர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களின் மீதான ஒவ்வொரு தாக்குதலின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதோடு தன் கடமை முடிந்து விட்டதாக கருதாமல் உரிய அழுத்தம் கொடுத்து தமிழக மீனவர்களின் நலனை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் நடவடிகை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழக மீனவர்களின் நலனை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,DTV ,Dhinakaran ,Chennai ,Dinakaran ,Tamil ,Nadu ,Amma ,TTV ,
× RELATED சட்டவிரோத குவாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?: ஐகோர்ட் கிளை கேள்வி