சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;
“சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது தொடர்பாக விஞ்ஞானி நம்பி நாராயணனை திருவனந்தபுரத்தில் பேட்டி எடுத்து திரும்பிய நெல்லை செய்தியாளர் குழு சென்ற வாகனம் நாங்குநேரி நான்குவழி சாலையில் விபத்துக்குள்ளானதில், தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் பத்திரிக்கையாளர் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நாகராஜன், வள்ளிநாயகம், மற்றும் நாராயணன் ஆகியோர் பூரண நலம் பெற்று வீடு திரும்பவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
The post திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் appeared first on Dinakaran.
