×

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை அமைக்க எந்த முன் அனுமதியோ, தடையில்லா சான்றோ பெறவில்லை: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை அமைக்க எந்த முன் அனுமதியோ, தடையில்லா சான்றோ பெறவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெருவித்துள்ளது. கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை நிறுவப்பட்டுள்ளது. சிலை அமைந்துள்ள பகுதியில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். மலைவாழ் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையிலும் வனவிலங்குகளின் இயற்கையான வாழ்க்கை முறைக்கு இடையூறாகவும் சிலை அமைக்கப்பட்டிருப்பதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

The post கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை அமைக்க எந்த முன் அனுமதியோ, தடையில்லா சான்றோ பெறவில்லை: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Adiyogi ,Isha Yoga Center ,Coimbatore ,Tamil Nadu government ,ECtHR ,Chennai ,Adiyogi idol ,Tamilnadu government ,ICourt ,
× RELATED ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார்