×

ஒன்றிய, மாநில அரசு இணைந்து பொன்னோரி அரசு மருத்துவமனைக்கு விருது: பணியாளர்களுக்கு பாராட்டு

பொன்னேரி, ஆக.24: பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு ஒன்றிய, மாநில அரசுகளின் இரண்டு விருதுகள் கிடைத்ததை முன்னிட்டு மருத்துவமனை பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
பொன்னேரியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்றிதழ் வழங்குவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ வசதிகள் சிறப்பாக இருந்தமைக்காக ஒன்றிய அரசின் தேசிய அளவிலான விருது மற்றும் மகப்பேறு சேவைக்கான லக்‌ஷயா எனப்படும் விருதுகளும் இந்த மாதம் 12ம் தேதி வழங்கப்பட்டது.

கடந்த காலங்களில் மருத்துவமனையில் கட்டமைப்பு மற்றும் மருத்துவ சேவைகள் மேம்படுத்தப்பட்டு, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் உரிய நேரத்தோடு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பயனடைந்தனர். இந்தப் பணிகளை சிறப்பாக செய்த பணியாளர்களுக்கு மருத்துவமனையின் சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் அசோகன் தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பாக மருத்துவப் பணிகளை மேற்கொண்ட மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், மருத்துவ உபகரணங்களை கையாளுபவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு, பொன்னேரி அரசு மருத்துவமனை ஏற்பாட்டில் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மேலும், அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய, மாநில அரசு இணைந்து பொன்னோரி அரசு மருத்துவமனைக்கு விருது: பணியாளர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Ponnori Government Hospital ,Union, ,State Govt ,Ponneri ,Ponneri Government Hospital ,Union ,State Governments ,
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...