×

பூங்கரகம் தூக்கி வந்தவருக்கு பரிசு வழங்க யுபிஐ கியூஆர் கோடு வசதி

ராசிபுரம், ஆக.24: ராசிபுரம் அருகே கோயில் திருவிழாவில் பூங்கரகம் எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர், தனக்கு பரிசளிக்க கரகத்தில் ஜிபே யுபிஐ கியூஆர் கோடு பிரிண்ட் ஒட்டியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இது இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. உலகம் முழுவதுமாக கரன்சி நோட்டுக்கள் புழக்கத்தில் இல்லாத டிஜிட்டல் கரன்சி, கூகுள்பே, ஜிபே, வங்கிகளின் இணையதளம் மூலம் யுபிஐ பார்கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி வந்துள்ளது. டீக்கடை, பெட்டிக்கடை துவங்கி அனைத்து இடங்களிலும், 5 ரூபாய் முதல் ஆயிரக்கணக்கான ரூபாய் பரிமாற்றங்கள் இவ்வாறாக நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளர்கள் மொபைல் போன் மூலம் இந்த பண பரிவர்த்தனை தேவையான இடங்களில் செய்து வருகின்றனர்.

ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூரில் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. விழாவில் பூங்கரகம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும், குண்டம் இறங்குதல் போன்ற சமயங்களில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நன்கொடை அளிப்பது வாடிக்கை. அதிலும் வசதிக்கு தகுந்தார் போல் பணம் குத்துவது கிராமப்புறத்தில் வழக்கமாகும். இந்நிலையில் நேற்று, திருவிழாவில் பூங்கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தவர்கள், தனக்கான அன்பளிப்பை வழங்க ஜிபே, போன்பே யுபிஐ கியூஆர் கோடு பிரிண்ட்டை கரகத்தில் ஒட்டியிருந்தனர். உறவினர்கள் பலரும் இதை ஸ்கேன் செய்து அன்பளிப்பை செலுத்தினர். இந்த புகைப்படம் இணைய தளத்தில் வைரலாகி உள்ளது.

The post பூங்கரகம் தூக்கி வந்தவருக்கு பரிசு வழங்க யுபிஐ கியூஆர் கோடு வசதி appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Dinakaran ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து