×

பொன்னமராவதி அருகே செவலூர் பூமிநாதர் ஆரணவல்லி கோயிலில் வாஸ்து சிறப்பு பூஜை

பொன்னமராவதி, ஆக. 24: பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் பூமிநாதர் ஆரணவல்லி கோயிலில் வாஸ்து சிறப்பு பூஜை நடைபெற்றது. பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் பூமிநாதர் ஆரணவல்லி கோயில் தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாகும். இக்கோயில் புதிய வீடு தங்கு தடையின்றி கட்டி முடிக்கவும் மற்றும் அனைத்து வாஸ்;து குறைகளையும் தீர்க்கும் ஆலயமான செவலூர் பூமிநாதர் ஆரணவல்லி கோயிலில் ஒவ்வொரு வாஸ்து நாளன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று 23 ம் தேதி வாஸ்து நாளை முன்னிட்டு, இக்கோயில் வாஸ்து ஹோமம் யாக பூஜைகள் நடத்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இந்த வாஸ்து ஹோமத்தில் வைத்து பூசிக்கப்பட்டசெங்கலை வாங்கி சென்றால் கட்டடப் பணிகள் துரிதமாகவும் தங்கு தடையின்றி முடியும் என்ற நம்பிக்கையில் செங்கலை வாங்கி செல்கின்றனர்.

காரைக்குடி, ஈரோடு,மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர்,திண்டுக்கல்,பெரம்பலூர், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து வாஸ்து நாதரை தரிசனம் செய்தனர். காலை முதல் மாலை வரை பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. காலை, மதியம் பக்தர்களுக்கு இலவசமாக அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை பூமிநாதர் ஆரணவல்லி வாஸ்து பூஜை நற்பணி மன்றத்தினர் செய்து இருந்தனர்.. பனையப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post பொன்னமராவதி அருகே செவலூர் பூமிநாதர் ஆரணவல்லி கோயிலில் வாஸ்து சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Tags : Chevalur Bhuminathar Aranavalli Temple ,Ponnamaravati ,Ponnamaravati… ,
× RELATED பொன்னமராவதி சிவன் கோயிலில் வைகாசி மாத கார்த்திகை சிறப்பு வழிபாடு