×

நாடு முழுவதும் சாலை போடுவதாக கூறி ரூ3 லட்சம் கோடி லஞ்சம் பெற்ற மோடி விரைவில் கம்பி எண்ணுவார்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி

ஈரோடு: நாடு முழுவதும் சாலை போடுவதாக கூறி ரூ.3 லட்சம் கோடி லஞ்சம் பெற்ற பிரதமர் மோடி விரைவில் கம்பி எண்ணுவார் என ஈரோட்டில் ஈவிகேஎஸ். இளங்கோவன் எம்எல்ஏ தெரிவித்தார். ஈரோட்டில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் எம்எல்ஏ நேற்று அளித்த பேட்டி: சுதந்திரம் பெற்ற இந்தியாவில் இதுவரை நடக்காத மிகப்பெரிய ஊழல், பிரதமர் மோடி செய்திருக்கிறார். நாடு முழுவதும் சாலைகள் போடும் திட்டத்தை கூறி ரூ3 லட்சம் கோடி லஞ்சமாக பெற்றிருக்கிறார். மோடி பிரதமர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டவுடன், கம்பி எண்ணுகிற பணிக்கு செல்லுகிற அவசியம் ஏற்படும்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளே முன்வந்து மோடி அரசாங்கம் செய்த ஊழல் குறித்து வழக்கு தொடுக்க வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியை தந்து கொண்டிருக்கிறார். ஆனால், கிண்டி ராஜ்பவனில் இருந்து கொண்டு ஆளுநர் ரவி தேவை இல்லாத இடையூறு கொடுக்கிறார். இத்தகைய ஜனநாயகத்திற்கு எதிரான செயல்களை தொடர்ந்து செய்வாரேயானால், மக்கள் அவரை ஊரை விட்டு துரத்துகிற வேலையில் ஈடுபடுவார்கள். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வாயை திறந்தால் பொய்தான் பேசுகிறார். அவர் நடைபயணம் செல்லவில்லை. பஸ் பயணம் செய்கிறார். இந்த பயணத்துடன் அவர் காணாமல் போய்விடுவார்.

புரட்சித்தமிழர் என்ற பட்டம் சத்யராஜ்க்கு உள்ளது. நடிகர் என்றாலும் அவர் தன்மானம் மிக்கவர், மேஜைக்கு அடியில் ஊர்ந்து சென்று யாருடைய காலையும் பிடிக்காதவர். அவருக்குதான் புரட்சித்தமிழர் பட்டம் பொருத்தமானது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி யாருக்கு வழங்க வேண்டும் என்பதை காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, சோனியா, ராகுல் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post நாடு முழுவதும் சாலை போடுவதாக கூறி ரூ3 லட்சம் கோடி லஞ்சம் பெற்ற மோடி விரைவில் கம்பி எண்ணுவார்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Modi ,EVKS ,Elangovan ,Dinakaran ,
× RELATED பாஜகவிற்கு நாட்டின் வளர்ச்சியே முதன்மையானது: பிரதமர் மோடி பேச்சு