×

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியல்: திண்டுக்கல் பேராசிரியர்கள் 4 பேர் தேர்வு

நிலக்கோட்டை: சர்வதேச அளவில் கடந்த 2022ல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முதல் 2 சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலை அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜான் லொன்னிடிஸ் மற்றும் அவரது குழுவினர் வெளியிட்டுள்ளனர். மொத்தம் 22 அறிவியல் துறைகள், 176 துணை துறைகளில் உலகின் சிறந்த விஞ்ஞானிகள் வகைப்படுத்தப்பட்டனர். இந்த விஞ்ஞானிகள், குறைந்தபட்சம் 5 ஆய்வு கட்டுரைகள், புலம் மற்றும் துணை புலம் சார்ந்த சதவீதங்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டனர். இந்த பட்டியலில் உலகம் முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமான விஞ்ஞானிகள் இடம் பிடித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து 3,500க்கும் அதிகமான விஞ்ஞானிகள் இடம் பிடித்துள்ளனர். இதில் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் கணிதவியல் துறை பாலசுப்பிரமணியம், சேதுராமன், வேதியியல் துறை மீனாட்சி, இயற்பியல் துறை மாரிமுத்து ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே 2019, 2020, 2021ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்து, தற்போது நான்காவது முறையாக இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியல்: திண்டுக்கல் பேராசிரியர்கள் 4 பேர் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Nilakottai ,Stanford ,America ,Dinakaran ,
× RELATED காவல் நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த குற்ற வழக்கு வாகனங்கள்