- முருகப்பா தங்கக் கோப்பை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கஜி
- சென்னை
- முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி
- தின மலர்
சென்னை: முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டியின் 94வது தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது. முதல் லீக் ஆட்டத்தில் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு – இந்திய தலைமை தணிக்கை துறை அணிகள் மோதுகின்றன. முருகப்பா குழுமம், மெட்ராஸ் கிரிக்கெட் சங்கம் (எம்சிசி) இணைந்து முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டியை நடத்தி வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக இடையில் நிறுத்தப்பட்டு இருந்த இந்தப் போட்டி, இந்த ஆண்டு மீண்டும் நடத்தப்படுகிறது. இன்று தொடங்கும் இந்த போட்டியில் மொத்தம் 10 அணிகள் தலா 5 அணிகள் கொண்ட 2 பிரிவுகளாக களம் காண்கின்றன. ஏ பிரிவில் இந்தியன் ஆயில், இந்திய கடற்படை, இந்தியன் ரயில்வே, ஹாக்கி கர்நாடகா, ஒன்றிய தலைமை செயலகம் ஆகிய அணிகளும், பி பிரிவில் பஞ்சாப் தேசிய வங்கி, இந்திய ராணுவம், இந்திய விமானப்படை, ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, இந்திய தலைமை கணக்கு தணிக்கைத் துறை அணிகளும் இடம் பெற்றுள்ன.
இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு – இந்திய தலைமை கணக்கு தணிக்கைத் துறை அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து 2வது ஆட்டத்தில் இந்தியன் ரயில்வே – ஒன்றிய தலைமை செயலகம் அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. எழும்பூர், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் தினமும் மாலையில் நடைபெறும் இந்தப் தொடரில், லீக் ஆட்டங்கள் ஆக.31ம் தேதியுடன் முடிகின்றன. தொடர்ந்து 2 பிரிவுகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் களம் காணும். அரையிறுதி ஆட்டங்கள் ஆக.2ம் தேதியும், பைனல் ஆக.3ம் தேதியும் நடைபெறும்.
The post முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி; முதல் ஆட்டத்தில் ஹாக்கி தமிழ்நாடு – சிஏஜிஐ மோதல் appeared first on Dinakaran.
