×

இந்திய விண்வெளி ஆய்வில் சாதனை படைக்கும் இஸ்ரோ: சந்திரயான் 3-ல் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணி தொடங்கியது..!!

பெங்களூரு: சந்திரயான் 3-ல் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணி தொடங்கியது. ஆக.5 இல் நிலவின் பாதைக்குள் நுழைந்த சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தரையிறங்குவதற்கான கட்டளையை பெங்களூருவில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் பிறப்பித்தனர். 8 கட்டங்களாக நிலவில் மென்மையாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கிடைமட்டமாக சுற்றும் லேண்டரை செங்குத்தான கோணத்தில் திருப்பி தரையிறக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. தானியங்கி இறங்கு இயக்கத்தை இயக்கியவுடன் லேண்டர் வாகனம் படிப்படியாக இறங்கத் தொடங்கும். தரையிறங்குவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து நிலவில் விக்ரம் லேண்டர் இறங்குகிறது.

நிலவின் தென்பகுதியில் திட்டமிட்டப்படி மாலை 6.04 மணிக்கு லேண்டர் தரையிறங்கவுள்ளது. நிலவின் போகுஸ்லாவ்ஸ்கி, மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே லேண்டர் தரையிறங்கவுள்ளது. தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ தலைவர் சோம்நாத், 10,000 விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு தேவையான ஒத்துழைப்புகளை அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் அளித்து வருகின்றன.

லேண்டரின் வேகம் 5,700 கி.மீ. ஆக குறைப்பு

தரையிறங்கும் பணி தொடங்கியுள்ள நிலையில் லேண்டரின் வேகம் 5,700 கி.மீ. ஆக குறைக்கப்பட்டுள்ளது. 17 நிமிடங்களில் 8 கட்டங்களாக பயணித்து நிலவில் லேண்டர் தரையிறங்கவுள்ளது. தற்போது 31 கி.மீ. உயரத்தில் லேண்டர் உள்ள நிலையில் படிப்படியாக வேகமும், உயரமும் குறைக்கப்பட்டிருக்கிறது.

The post இந்திய விண்வெளி ஆய்வில் சாதனை படைக்கும் இஸ்ரோ: சந்திரயான் 3-ல் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணி தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : ISRO ,Vikram ,Moon ,Bengaluru ,Ag ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...