×

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 56 பணியிடங்கள்

ஆந்திரா, திருப்பதி மாவட்டம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 56 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:

1 Catering Supervisor: 1 இடம் (எஸ்சி). தகுதி: ஹோட்டல் மேனேஜ்மென்ட் அல்லது ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் சமையல் தொழில்நுட்பம் அல்லது ஹாஸ்பிடலிட்டி மற்றும் ஹோட்டல் நிர்வாகம் அல்லது சமையல் அறிவியல் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு முன்அனுபவம் அல்லது சமையல் கலை பாடத்தில் டிப்ளமோ மற்றும் 3 ஆண்டு முன்அனுபவம் அல்லது ஹோட்டல் மேனேஜ்மென்ட் பாடத்தில் முதுநிலை பட்டப்படிப்பு/டிப்ளமோ மற்றும் 3 ஆண்டுகள் முன்அனுபவம். சம்பளம்: ரூ.35,400- 1,12,400. வயது: 18 முதல் 35க்குள்.

2 Nurse- B: 7 இடங்கள் (பொது-4, எஸ்சி-1, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: 60% தேர்ச்சியுடன் நர்சிங் பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ மற்றும் ஒன்றிய, மாநில அரசு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ.44,900-1,42,400. வயது: 18 முதல் 35க்குள்.

3 Pharmacist- A: 2 இடங்கள் (பொது-1,ஒபிசி-1). தகுதி: 60% தேர்ச்சியுடன் பார்மசி பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ மற்றும் 2 ஆண்டுகள் முன்அனுபவம். சம்பளம்: ரூ.29,200-92,300. வயது: 18 முதல் 35க்குள்.

4 Radiographer- A: 4 இடங்கள் (பொது-2, எஸ்சி-1, ஒபிசி-1) தகுதி: 60% தேர்ச்சியுடன் பார்மசி பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ மற்றும் 2 ஆண்டுகள் முன்அனுபவம். சம்பளம்: ரூ.25,500-81,100. வயது: 18 முதல் 35க்குள்.

5 Lab Technician-A: 1 இடம் (எஸ்டி) தகுதி: மருத்துவ பரிசோதனை மையம் தொழில்நுட்பத்தில் 2 ஆண்டு டிப்ளமோ. சம்பளம்: 25,500- 81,100. வயது: 18 முதல் 35க்குள்.

6 Lab Technician- A (Dental Hygientist): 1 இடம் (ஒபிசி). தகுதி: 60% தேர்ச்சியுடன் டென்டல் ஹைஜின் கோர்சில் 2 ஆண்டு டிப்ளமோ. சம்பளம்: ரூ.25,500-81,100. வயது: 18 முதல் 35க்குள்.

7 Assistant (Rajbasha): 1 இடம் (பொது). தகுதி: 60% தேர்ச்சியுடன் பட்டப்படிப்பு மற்றும் இந்தி டைப்ரைட்டிங்கில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஆங்கில டைப்ரைட்டிங் திறன் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. சம்பளம்: ரூ,25,500-81,100. வயது: 18 முதல் 25க்குள்.

8 Cook: 4 இடங்கள் (பொது-2, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: எஸ்எஸ்எல்சி/மெட்ரிகுலேசன் தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் முன்அனுபவம். சம்பளம்: ரூ.19,900-63,200. வயது: 18 முதல் 35க்குள்.

9 Light Vehicle Driver ‘A’: 13 இடங்கள் (பொது-7, எஸ்சி-1, எஸ்டி-1, ஒபிசி-3, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: எஸ்எஸ்எல்சி தேர்ச்சியுடன் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் முன்அனுபவம் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.19,900-63,200. வயது: 18 முதல் 35க்குள்.

10 Heavy Vehicle Driver ‘A’: 14 இடங்கள் (பொது-7, எஸ்சி-2, எஸ்டி-1, ஒபிசி-3, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: எஸ்எஸ்எல்சி தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் முன்அனுபவம் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.19,900-63,200. வயது: 18 முதல் 35க்குள்.

11 Fireman ‘A’: 8 இடங்கள் (பொது-4, எஸ்டி-1, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: எஸ்எஸ்எல்சி தேர்ச்சியுடன் நல்ல திடகாத்திரமான உடல் திறன் பெற்றிருக்க வேண்டும். வயது: 18 முதல் 25க்குள்.

வயது வரம்பு 24.08.2023 தேதிப்படி கணக்கிடப்படும். https://www.shar.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை 24.08.2023.

The post இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 56 பணியிடங்கள் appeared first on Dinakaran.

Tags : Indian Space Research Centre ,Satish ,Dawan Space Research Centre ,Andhra Pradesh, Tirupati District, Srihrikota ,
× RELATED சென்னையில் அதிவேகமாக சென்ற கார் மோதி இளைஞர் பலி