×

டிபன் சாப்பிட்ட விவகாரத்தில் தனியார் கம்பெனி ஊழியர் மீது கரண்டியால் தாக்கிய பெண் கைது

பெரம்பூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா பகுதியை சேர்ந்தவர் ஆதிமூலம் (46). இவர் கொடுங்கையூர் பகுதியில் தங்கியிருந்து சோப்பு தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு 10 மணி அளவில், எம்கேபி.நகர் மேற்கு அவென்யூ பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடையில் டிபன் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுத்துள்ளார். இதன்பிறகு அங்கிருந்து கிளம்பும்போது டிபன் கடை நடத்திவரும் விஜயகுமாரி (51) என்பவர் அதே பகுதியை சேர்ந்த அர்ஜுன் என்கின்ற கவுதம் (23) என்பவருடன் சென்று ஆதிமூலத்திடம் சென்று, ‘’நீங்கள் டிபன் சாப்பிட்டதற்கு பணம் தரவில்லை’’ என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளதாக தெரிகிறது. அதற்கு ஆதிமூலம், ‘’நான் பணம் கொடுத்துவிட்டேன்’’ என கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், விஜயகுமாரி கடையில் இருந்த பெரிய இரும்பு கரண்டியை எடுத்து ஆதிமூலம் தலையில் சரமாரியாக தாக்கியதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து புகாரின்படி, எம்கேபி.நகர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து விஜயகுமாரியை கைது செய்தனர். இதுசம்பந்தமாக அர்ஜூனை தேடி வருகின்றனர்.

The post டிபன் சாப்பிட்ட விவகாரத்தில் தனியார் கம்பெனி ஊழியர் மீது கரண்டியால் தாக்கிய பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Adhimoolam ,Thitakudi ,Cuddalore district ,Kodunkaiyur ,
× RELATED பெரம்பூர், வியாசர்பாடியில் வழிப்பறி செய்த 3 பேர் கைது