×

ரூ.20 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

ஆனைமலை : ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இதில், ஆனைமலை மற்றும் கோட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 86 விவசாயிகள் மொத்தம் 654 மூட்டை கொப்பரை கொண்டு வந்திருந்தனர். இதில் 360 மூட்டை முதல்தர கொப்பரை ஒரு கிலோ ரூ.73.46 முதல் ரூ.79.610 ஆகவும், 297 மூட்டை 2ம் தர கொப்பரை ஒரு கிலோ ரூ.46.66 முதல் ரூ.68.92 ஆகவும் ஏலம் போனது. இந்த ஏலத்தின்போது விவசாயிகள் கொண்டு வந்த 295 குவிண்டால் கொப்பரைகள் மொத்தம் ரூ.20.99 லட்சத்துக்கு ஏலம் போனது.

இதனை, 7 வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். தற்போது சுற்றுவட்டார பகுதியில் மழை குறைவால் நேற்று நடந்த ஏல நாளில், விவாயிகள் கொண்டு வந்த கொப்பரையின் அளவு அதிகமாக இருந்ததாக, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தெரிவித்தார்.

The post ரூ.20 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Anaimalai ,Kotur ,
× RELATED கோடை விடுமுறையில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் டாப்சிலிப் வருகை