×

களக்காடு பகுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு

*மண் கடத்திய டிராக்டரை மடக்கி பிடித்தார்

களக்காடு : களக்காடு பகுதியில் திடீர் ஆய்வு நடத்திய மாவட்ட கலெக்டர் மண் கடத்திய டிராக்டரை மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேற்று களக்காடு பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். களக்காடு அரசு மருத்துவமனையை பார்வையிட்ட கலெக்டர் கார்த்திகேயன், களக்காடு போலீஸ் நிலையத்திற்கு சென்று சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்தார். பின்னர் களக்காடு யூனியன் அலுவலகத்திலும், யூனியன் மூலம் நடந்து வரும் வளர்ச்சிப்பணிகளையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து தேவநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்திலும் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அங்குள்ள ஆதிதிராவிடர் காலனியில் அமைக்கப்பட்டு வரும் பேவர் பிளாக் சாலையையும் பார்வையிட்டார். அவருடன் களக்காடு யூனியன் ஆணையாளர் கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றனர். கலெக்டர் கார்த்திகேயன் களக்காடு-நாங்குநேரி சாலையில் வந்து கொண்டிருந்த போது, மண் ஏற்றி வந்த டிராக்டரை மடக்கி பிடித்து சோதனையிட்டார்.

இதில் டிராக்டரில் அளவுக்கதிகமாக அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுபற்றி கலெக்டர் வருவாய்துறையினர் மூலம் களக்காடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து விரைந்து சென்ற போலீசார், டிராக்டரை பறிமுதல் செய்து, டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் பணகுடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (37) என்பவரை கைது செய்தனர். மண் கடத்திய டிராக்டரை கலெக்டர் மடக்கி பிடித்த சம்பவம் களக்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post களக்காடு பகுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kalakadu ,Kalakkadu ,Dinakaran ,
× RELATED களக்காடு மலையில் நீரோடைகள் வறண்டு...