- நெடுஞ்சாலைகள் துறை
- ஊட்டி
- கூனோர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம்
- குன்னூர் மவுண்ட் ரோடு
- நெடுஞ்சாலைத் துறை
- தின மலர்
ஊட்டி, ஆக.23: குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாதாந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்தில் குன்னூர் மவுண்ட் ரோட்டில் நடைபாதை முழுவதும் கடைகள் வைக்க அனுமதித்து பொதுமக்கள் சாலையில் நடக்கவும், விபத்துகள் இல்லாமல் வாகனங்கள் செல்லவும் வழிவகை செய்துள்ள மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு செப்டம்பர் 1ம் தேதி பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியரை கேட்டுக்கொள்வது எனவும் வாரம் தோறும் புதன் கிழமைகளில் நடைபெறும் காவல் துறை குறை தீர்க்கும் நாளில் காவல் நிலையத்தில் தீர்க்கப்படாத குறைகளுடன் மனு கொடுக்க வரும் மக்களை அதே அலுவலர்களிடம் மனு கொடுக்கச் சொல்வது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாவட்ட எஸ்பி மக்களிடம் நேரடியாக மனுக்கள் பெற்று தீர்வு காண வேண்டும். அனைத்து கல்வி நிலையங்களிலும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை கல்வித்துறை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
The post நெடுஞ்சாலைத்துறைக்கு பாராட்டு விழா நடத்த தீர்மானம் appeared first on Dinakaran.
