×

ஓணம் திருவிழாவையொட்டி பூக்களின் விலை அதிகரிப்பு

 

பாலக்காடு, ஆக.23: கேரளாவில் அனைத்து வீடுகளிலும், கோவில்களின் வாசல்களிலும் அத்தப்பூக்கோலம் அமைத்து மகாபலி மன்னரை வரவேற்பது வழக்கம். இதன்படி கடந்த 21ம் தேதி முதல் கேரள மக்கள் அத்தப்பூக்கோலம் போட்டு வருகின்றனர். இதனால் பாலக்காடு பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கோயம்புத்தூர், திண்டுக்கல், பழனி, ஒட்டன் சத்திரம், மதுரை, பெங்களூர் ஆகிய இடங்களிலிருந்து பூ வியாபாரிகள் இரவு பகலாக பூ விற்பனை செய்து வருகின்றனர்.

இதன்படி ரோஜா பூ ரூ.400, அரளி ரூ.350, செண்டுமல்லி (மஞ்சள், ஆரஞ்சு) ரூ.120, வாடாமல்லி ரூ.140, செம்பங்கி ரூ.350, முல்லை ரூ.600-800, தாமரை ஒன்று ரூ.30, வெள்ளை, கோழிக்கொண்டை ரூ.140 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு, கர்நாடகாவிலிருந்து பூக்களின் வரத்து குறைந்து விட்டதால் பூக்களின் விலைகள் அதிகரித்துள்ளன.

The post ஓணம் திருவிழாவையொட்டி பூக்களின் விலை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Onam festival ,Palakkad ,Kerala ,King ,Mahabali ,Athapookolam ,
× RELATED தனியாக பயணம் செய்கின்ற பெண்களின்...