×

பலாப்பழ சீசன் துவங்கியதால் யானைகள் கூட்டமாக குட்டிகளுடன் முகாம்: தேயிலை தோட்ட பணியாளர்கள், வாகன ஓட்டிகள் அச்சம்

 

கோத்தகிரி,ஆக.23: கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் பலாப்பழ சீசன் துவங்கிய நிலையில் காட்டு யானைகள் கூட்டமாக குட்டிகளுடன் முகாமிடுவதால் தேயிலை தோட்ட பணியாளர்கள், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது பலாப்பழம் சீசன் துவங்கி உள்ளது. இதனால் சம வெளிப்பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் கூட்டமாக குட்டிகளுடன் தட்டப்பள்ளம், முள்ளூர், மாமரம் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு உள்ளன. அவ்வாறு முகாமிட்டுள்ள காட்டு யானைகள் பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களில் புகுந்து விடுகிறது.

சில நேரங்களில் பிரதான சாலையான கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் யானைகள் உலா வருகிறது. இதனால் தேயிலை தோட்டங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் மற்றும் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பயணிக்கும் 2 சக்கரம், 4 சக்கர வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே தற்போது தட்டப்பள்ளம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைக் கூட்டங்களை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

The post பலாப்பழ சீசன் துவங்கியதால் யானைகள் கூட்டமாக குட்டிகளுடன் முகாம்: தேயிலை தோட்ட பணியாளர்கள், வாகன ஓட்டிகள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி